29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ’ஆப்’

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடனான செயலி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள அகஸ்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலியை உருவாக்கும் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீநிவாச ராவ் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.

ஸ்ரீநிவாச ராவ் கூறுகையில், “இந்த மொபைல் செயலி மூலம் பாதிக்கப்பட்ட மக்கள், அறிகுறிகள், வாய்ப்புக்கூறுகள், நகர்ப்பகுதிகள் குறித்து செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியப்படும். பின்னர் அவர்களின் பயணம், உடல்நிலை, சமீபத்திய உடல்நலப் பிரச்னைகள் குறித்து செயலி மூலமாகவே அறிந்த பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வோம்.

இந்த செயலி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பெரிய உதவியாய் இருக்கும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் என அனைத்தையும் அறியவும் இந்த செயலி உதவும். இதன் மூலமாகவே சுகாதாரத் துறை பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்த அங்கு சென்று சிகிச்சை அளிக்க முடியும்” என்றார்




கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ’ஆப்’

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு