கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளைமாளிகையில் நடந்தது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்தார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், “ கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதைமிகவும் ‘மிஸ்’ செய்கிறேன்” என்று கிண்டலாக தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..