கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தனது நாட்டுக்குள் வரும் பயணிகளைத் தடுக்க சர்வதேச வான்வழித் தளத்தை மூடியுள்ளது மார்ஷல் தீவு.அவசர நெருக்கடி நடவடிக்கை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக மார்ஷல் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''கொரோனா வைரஸ் தீவுகளுக்குள் பரவாமல் தடுக்க சர்வதேச போக்குவரத்து தற்காலிகமாக மூடப்படுகிறது. மார்ச் 22 வரை இரண்டு வாரத்துக்கு எவ்வித வெளிநாட்டுப் போக்குவரத்தும் மார்ஷல் தீவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
கூடுதலாக, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட 10 நாடுகளில் இருந்து விமானம் மற்றும் கடல் வழியாக உணவு மற்றும் பொருட்களை வழங்க அனுமதிக்க சில விதிவிலக்குகளுடன் தடை செய்யப்படுகிறது.
உலக நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வான்வழிப் போக்குவரத்துக்கான இந்தத் தடை உத்தரவு வரும் 22-ம் திகதி வரை அமுலில் இருக்கும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 80,000 மக்கள்தொகை கொண்ட மார்ஷல் தீவு, 2018 ஆம் ஆண்டில் சுமார் 6,800 சர்வதேச பயணிகளை வரவேற்கத் தொடங்கியது.
மார்ஷல், பிஜி மற்றும் பலாவ் ஆகிய இடங்களில் அச்சம் இருந்தபோதிலும், சிறிய பசிபிக் தீவுகள் நாடுகளில் இதுவரை வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..