28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களில் முதல்கட்டமாக 58 பேருடன் விமானப் படை விமானம் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் விமான நிலையத்தை வந்தடைந்தது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஈரான் நாட்டில் சிக்கித் தவித்து வரும் 2 ,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களை தாயகத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்றிரவு ஈரான் தலைநகர் டெஹ்ரான் புறப்பட்டு சென்றது.

அங்கு முதல் கட்டமாக 58 இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தட்டது. அதில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தை அடுத்து விமானம் படை விமானம் மூலம் அனைவரும் இந்தியா புறப்பட்டனர்.

இந்நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் விமானம் காலை 9.30 மணியளவில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தை வந்தடைந்தது. அங்கு மீண்டும் ஒருமுறை பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின். பயணிகள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.




ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு