பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அத்துமீறி எல்லைக்குள் நுழையும் எதிரி நாட்டு ட்ரோனை கட்டுப்படுத்தி தரையிரங்க செய்யும் வகையிலான நவீன ரக ட்ரோன் ஒன்றினை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டியை சேர்ந்த வானூர்த்தி துறை மாணவர்களான அஜோ, வாசு, ரிஷப் ஆகிய மாணவர்கள் இந்த நவீன ரக ட்ரோனை வடிவமைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 கி.மீட்டர் வரையில் கண்காணிக்கக்கூடிய அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அத்துமீறி நுழையும் ட்ரோன்களை கண்காணித்து அதன் கட்டுப்பாட்டை செயலிழக்கச் செய்து தரையிறக்க முடியும் பாதுகாப்பு துறை சார்ந்த பயன்பாட்டிற்காக இதனை உருவாக்கியுள்ளதாக கூறும் மாணவர்கள் ,4 கிலோ எடைவரை சுமந்து செல்லக்கூடிய வகையில் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கிகள் ,வெடிகுண்டுகள் ஆகியவற்றை ட்ரோனில் பொருத்தி எதிரிகளின் மீது தாக்குதல் நடத்திட முடியும் என்கின்றனர் மாணவர்கள்.
முதற்கட்டமாக தமிழக கமாண்டா படைப் பிரிவு தாங்கள் வடிவமைத்த ட்ரோனின் பயன்பாடு மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கேட்டுள்ளதாக தெரிவிக்கும் மாணவர்கள் மத்திய பிரதேச காவல்துறை மற்றும் கோவா மாநில தீயணைப்புத்துறையினரும் தாங்கள் வடிவமைத்துள்ள ட்ரோனை பயன்பாட்டை அறிந்து தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தாங்கள் வடிவமைத்துள்ள ட்ரோன் முழு பயன்பாட்டிற்கு வருகின்றபோது, போராட்டங்களை கண்காணிப்பது, மருத்துவ பயன்பாட்டிற்கும் இதனை பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மாணவர்கள்.
0 Comments
No Comments Here ..