சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100 க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 119,086 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையில், சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் கொரோனா கோரத்தாண்டம் ஆடுகிறது.
அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 168 பேர் உயிரிழந்துள்ளதால் இத்தாலி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து இத்தாலி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..