21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள், மற்றும் அமைச்சர்களின் விபரங்கள்

சீனாவில் ஆரம்பமாகி இன்று உலகளவில் பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக உலகளவில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா அச்சத்தால் பலநாடுகள் வெளிநாட்டு விமானபயணசேவைகளை நிறுத்தியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ், உலகின் 119 நாடுகளில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் இதன் தாக்கத்திற்கு உலகத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் முகம் கொடுத்துள்ளனர்.

பிரிட்டன்

பிரிட்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 62 வயதான அவர் தற்போது குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் அமைச்சர்

46 வயதான பிரான்ஸ் நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் பிராங்க் ரீஸ்டரும், கோவிட்-19 பாதிப்பு காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காண தனிமை வார்டுக்குச் சென்றபோது அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

தற்போது அவர் தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரான் அமைச்சர்

ஈரான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இராஜ் ஹரிர்சிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஈரானைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் பதேமே ரபார், முகமது அலி ரமாசானி ஆகியோர் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இறந்துவிட்டனர். மேலும் 20 எம்.பி.க்கள் கோவிட்-19 பாதிப்பு காரணமாக தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி தலைவர்

இத்தாலி நாட்டிலுள்ள ஜனநாயக கட்சியின் தலைவர் நிக்கோலா ஜிங்காரீட்டி, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கடந்த வாரம், வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிலுள்ள வோக்ஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜேவியர் ஒர்டேகா ஸ்மித், கோவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு மாநாட்டில் பங்கேற்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களுக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.




கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள், மற்றும் அமைச்சர்களின் விபரங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு