இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து ஆடை படம் வெளியாகும் சமயத்தில் அமலாபால் தான் புதிய உறவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமலாபால் காதலித்து வரும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மும்பையைச் சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் உடன் தான் அமலாபால் புதிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் அமாலாபால் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்திலிருந்து நீக்கிய பவிந்தர் சிங், பின்னர் பதிவிட்டும் வருகிறார். அதில் ஒரு புகைப்படத்தில் பெண் ஒருவரைக் கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் பவிந்தர் சிங். அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில், கோடைகாலத்தை இவரோடு கொண்டாடுகிறேன்” என்று கருத்து பதிவிடப்பட்டுள்ளது. எனவே பவிந்தர் சிங் அமலாபால் உடன் காதலில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக ஆடை படத்தை விளம்பரத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நடிகை அமலாபால் தனது காதலர் குறித்து விளக்கமளித்திருந்தார். அதில், ஒரு தாயால் தான் நிபந்தனையில்லாத அன்பு தர முடியும். தியாகம் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் என்னாலும் அது முடியும் என்று என் காதலர் நிரூபித்துவிட்டார்.
என்னுடன் இருக்க, என்னை ஆதரிக்க அவர் அவரது வேலையை விட வேண்டியிருந்தது. எனது கனவு என்னவென்று அவருக்குத் தெரியும். அதை அவர் மதிக்கிறார். என்னுடன் நிற்கிறார். அவர் என் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை” என்று கூறியிருந்தார்
0 Comments
No Comments Here ..