21,Sep 2024 (Sat)
  
CH
உலக செய்தி

கொரோனாவின் தாக்கம் 3 நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் பலி

ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை.

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக மாறி உள்ளது.

இதேவேளை, மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட திட்டமிட்டுள்ளது ஜெர்மனி.

ஆஸ்திரியாவில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இப்போது வரை 6,513 பேர் இறந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 3,217 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் 69 பேர் இப்போது வரை பலியாகி உள்ளனர்.

ஸ்பெயினில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 169,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் கொரோனா வைரஸை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உள்ள போதும், ஆசியப் பங்குச் சந்தைகள் இறங்கு முகமாகவே உள்ளன.

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 74 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.




கொரோனாவின் தாக்கம் 3 நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு