19,Apr 2024 (Fri)
  
CH
உலக செய்தி

பிரித்தானியாவில் திங்கட்கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில், சிலவற்றை தளர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், தனது அமைச்சரவையுடன் இதுதொடர்பாக மதிப்பாய்வு செய்த பின்னர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகின்றது.

அத்துடன், ஊரடங்கின் அடுத்த கட்டத்திற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்ட, பிரதமர் வார இறுதியில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதன்படி கடந்த வியாழக்கிழமை சமீபத்திய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்ய ஆர்வமாக இருப்பதால், திங்கட்கிழமை ஏதேனும் மாற்றம் நிகழலாம் என மக்கள் கருதுகின்றனர்.

ஆறு வாரங்களுக்கு முன்னர் அதாவது கடந்த மார்ச் 23 திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பான எந்தவொரு மாற்றங்களும் குறித்த முக்கிய அறிவிப்புகள், ஞாயிற்றுக்கிழமை வரை எதிர்பார்க்கப்படாது




பிரித்தானியாவில் திங்கட்கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு