15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா தொற்று!

புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் தமது கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் இந்த தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் உரிய சுகாதார வசதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் கொரோனா தொற்றிற்குள்ளாகி வருவதாக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சில தினங்களின் முன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





மகசீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா தொற்று!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு