30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

20 பேருடன் கடலில் மாயமான படகு

பஹாமாஸ் மற்றும் புளோரிடா இடையே உள்ள கடற்பகுதியில் 20 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பஹாமாஸ் நாட்டின் பிமினி தீவிலிருந்து புறப்பட்ட படகு, 20 பயணிகளுடன் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் தென் அமெரிக்க மாகாணமான பிளோரிடாவில் உள்ள lake Worth என்ற இடத்துக்கு பயணிக்கத் தொடங்கியது.

ஆனால், அந்தப் படகு துறைமுகத்திற்கு வந்து சேரவே இல்லை என செவ்வாயன்று கடலோர காவல்படைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு இரு நாடும் இணைந்து சுமார் 17,000 சதுர மைல்களுக்கு (44,000 சதுர கிலோமீட்டர்) வான்வழி மற்றும் கடல்வழி தேடலை மேற்கொண்டன. ஆனால் அவர்களது முயற்சி தோல்வியடைய, வெள்ளிக்கிழமை தேடல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை இந்தப் படகு 'missing' என அறிவிக்கப்பட்டது. மேலும் காணாமல் போன படகு குறித்து ஏதேனும் தகவல் தெரியவந்தால், கடலோரக் காவல்படைக்கு தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இப்படகில் பயணித்த 20 பேரின் நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அவர்கள் நடுக்கடலிலேயே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.





20 பேருடன் கடலில் மாயமான படகு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு