30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

துருக்கியில் நடந்த சம்பவம் -விமானத்தின் மூக்கை உடைத்த பறவைகள்

துருக்கியின் விமானம் ஒன்று பறவைக்கூட்டத்துடன் மோதிய நிலையில் அவரசமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

துருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN,) போயிங் 777 வகை சரக்கு விமானம் ஒன்று, துருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்தது.

இதன்போது விமானம் மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டத்துடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose) , உடல் பகுதியிலும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து , விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.

இதன்பின் அனுமதியை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானி விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.





துருக்கியில் நடந்த சம்பவம் -விமானத்தின் மூக்கை உடைத்த பறவைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு