கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை அல்லது உரிமையின் பகுதி இலங்கை அரசாங்கத்தினால் வெளி தரப்பினருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பிரமதர் பதிலளித்தார்.
இதேவேளை தொற்று நோய் தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனை தெரிவுக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் உடனடியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வகைகளை துரிதமாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உப்புல் கலபதி பிரதமரிடம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி பதிலளிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..