05,Dec 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஏற்றுமதி வலய கிராமங்கள் வேலைத்திட்டம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பம்...

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பமாகிறது.

ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் மொத்தமான ஒன்பது ஏற்றுமதி வலயங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஜனாக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்தியில் ஏற்றுமதித்துறை மூலம் தற்போது இரண்டு வீதமாக காணப்படும் பங்களிப்பினை 2025ஆம் ஆண்டை அடையும் போது நான்கு சதவீதமாக உயர்த்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, கரும்பு, சோளம், முந்திரிகை, மிளகு, கறுவா, வெற்றிலை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழிக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.




ஏற்றுமதி வலய கிராமங்கள் வேலைத்திட்டம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பம்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு