கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பாடாய்படுத்தியது. 2-வது அலையில் இந்தியாவை அலற வைத்து வருகிறது. என்னதான் தடுப்பூசிகள் வந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனவை ஒழிக்க முடியாது என்று மருத்துவர்களின் உரத்த கூற்றாக உள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாத சாதாரண மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை பார்த்து இருக்கிறோம். ஆனால் மாஸ்க் அணியவில்லை என்று கூறி ஒரு நாட்டின் பிரதமருக்கே அபராதம் போடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..