03,May 2024 (Fri)
  
CH
சமையல்

உழைப்பாளிகளுக்கு இன்றே (May 01) இந்த கசகசா பாயாசம் செய்து கொடுங்கள்--

பண்டிகை அல்லது விஷேச நாட்களில் வீட்டில் பாயாசம் செய்வது வழக்கம். பொதுவாக பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் அறிந்தது சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் போன்றவை தான். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள கசகசாவை வைத்துக் கூட சுவையான பாயாசம் செய்யலாம் தெரியுமா? இந்த பாயாசம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நற்பெயரை வாங்கித் தரும்.


உங்களுக்கு கசகசா பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கசகசா பாயாசத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: * கசகசா விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்

* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் - 1/2 கப்

* வெல்லம் - 3/4 கப்

* தண்ணீர் - 1 1/2 கப்

* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பச்சரிசியை மற்றும் கசகசாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி, வெல்லத்தை முற்றிலும் உருக வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு வெல்லப் பாகை அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளறி, 10௧5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்த நேரத்தில் பாயாசமானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும்.

* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி, அத்துடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான கசகசா பாயாசம் தயார்.

குறிப்பு: * பாயாசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், அத்துடன் காய்ச்சிய பாலை தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு இனிப்பு குறைவாக அல்லது அதிகமாக வேண்டுமானால், அதற்கு ஏற்ப வெல்லத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஒருவேளை உங்கள் வீட்டில் வெல்லம் இல்லாவிட்டால், அதற்கு பதிலாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




உழைப்பாளிகளுக்கு இன்றே (May 01) இந்த கசகசா பாயாசம் செய்து கொடுங்கள்--

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு