30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தம்பதிகளுக்கு - என்ன ஆச்சு? .

27 ஆண்டு இல்லற வாழ்க்கை.. மனைவியை பிரிகிறார் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.


உலகின் நம்பர்.1 பணக்காரர் யார் என்று கேள்விக்கேட்டாலே, பில்கேட்ஸ் என்று இன்னமும் நம்மூரில் பதில் சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு பலரும் உலகின் டாப் பணக்காரர்களாக உருவெடுத்தாலும், பில்கேட்ஸ் எனும் பெயருக்கான வீரியம் பலமானது.

அந்தளவுக்கு தனது மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர். இன்று, இவரது மைக்ரோசாப்ட் இயங்குதளம் இல்லாத கணினிகள் கிடையாது.


1994ல் திருமணம் கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். அதன்பின், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். அப்போது, அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை 1980ல் சந்தித்த பில் கேட்ஸ், அவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அறக்கட்டளை திருமணத்துக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


விவாகரத்து இந்நிலையில், இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன. இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என தெரிவித்துள்ளனர்.

நான்காவது பணக்காரர் ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியலின் படி, பில் கேட்ஸ் தற்போது 145.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். உலகின் நான்காவது பணக்காரர் இவரே. பல்வேறு நலப் பணிகள் மற்றும் திட்டங்களுக்காக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இதுவரை வழங்கியுள்ளது,


மாற்றம் இல்லை இருவரின் திடீர் பிரிவால், அறக்கட்டளை நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாகவும், அறங்காவலர்களாகவும் தொடருவார்கள்" என்று அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர்களின் பணிகள் அல்லது அமைப்பில் எந்த மாற்றங்களும் திட்டமிடப்படவில்லை. அறக்கட்டளையின் பணிகளில் அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தம்பதிகளுக்கு - என்ன ஆச்சு? .

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு