03,May 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

ஏன் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

பிறந்த நாள் தொடக்கம் ஒருவருக்கு தேவையான உணவை பல்வேறு வழிகளில் பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்கின்றோம். இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. ஆகவே எமது சமிபாட்டு தொகுதி சீராக இருக்க வேண்டும் என்பதை அடிக்கடி சிந்திக்க வேண்டும். 

நடுத்தர வயதை அடைந்ததும் உணவு பழக்க வழக்கங்களுக்கு அப்பால் பல்வேறு பழக்கவழக்கங்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி நிறையுணவை உண்ணுதலிள் அக்கரை செலுத்தாமல் இலகுவாக கிடைக்கும் உணவை ( உடலில் தீங்கை ஏற்படுத்தும் என தெரிந்தும் ) உண்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றோம். உடலுக்கு ஆரோக்கியத்தை தர வேண்டிய உணவு உடலுக்கு தீங்கை ஏற்படுத்தி நோயாளி ஆக்கி விடுகின்றது.

சத்தான உணவையும் ஜீரணிக்கும் உணவையும் உட்கொள்வது அவசியம். ஒரு நாளில் குறைந்தது மூன்று தடவைகள் கிரமமாக அளவாக உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இடை நேரங்களிலும் சிறிய அளவிலான உணவை எடுத்துக்கொள்ள முடியும். 

காலை உணவைத் தவிர்ப்பது உடலில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தும். நாளில் ஒரு நேரத்தில் மாத்திரம் அதிக உணவை எடுக்கும் பழக்கம் இருந்தால் உடல் நிறை அதிகரிக்கும் தவிர பல்வேறு உடல் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. 

நடுத்தர வயதில் சராசரி உயரத்தை கொண்ட ஒருவரின் நிறை 60 - 75 Kg ஆக இருக்க முடியும். வயது மற்றும் உடலின் உயரத்துக்கு ஏற்றவாறு உடல் நிறை சற்றுக்கூடி குறையலாம். BMI index வழிகாட்டி மூலம் உடல் நிறையை சராசரியாக பேண முடியும்.

ஒருவர் தனக்கு இருக்க வேண்டிய சராசரி நிறைக்கு ஏற்றவாறே என்பு மற்றும் மூட்டுகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். அதிக அளவு நிறை ஏதோ ஒரு வகையில் அதிக அளவில் உணவை உண்டதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கும். சராசரி நிறைக்கு மேலதிகமாக நிறையை கொண்டிருந்தால் ஒருவர் அந்த நிறையை தினசரி சுமந்து செல்லுவதை உணர வேண்டும். குறிப்பாக முழங்கால் இந்த நிறைய நீண்ட நாள் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்து மூட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.


தினமும் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பலர் தொழில் நெருக்குதல் காரணமாகவும முதல் நாள் இரவு உணவை காலம் தாழ்த்தி உண்ணுவதாலும் அளவுக்கு அதிகமாக இரவு உணவை உண்பதாலும் காலை உணவை எடுப்பதில்லை. 

இரவு மிகக்குறைந்த அளவுடன் சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.


இது தவிர குறிப்பிட்ட ஒரு நோய் இருப்பின் அதற்கு ஏற்றவாறு உணவை உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.


"சிறந்த உணவு பழக்கம் நிறைந்த வாழ்க்கை"

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஏன் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு