11,May 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் செலுத்தப்பட வேண்டும்

தனியார் துறையில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினால் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் அவர் பணியாற்றும் நிறுவனம் அந்த ஊழியருக்கு அவசியம் சம்பளம் வழங்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தனியார் துறையில் உள்ள 35 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களினதும் அரச கூட்டுத்தாபன மற்றும் நியாயாதிக்க சபைகள் உட்பட ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செலுத்தும் அனைத்து உறுப்பினர்களினதும் தொழில் பாதுகாக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலுக்கு வரமுடியாமல் வீடுகளில் குறிப்பிட்ட காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை செலுத்துவதற்கும் தொழில் திணைக்களமும் முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல வாரங்கள் மூடப்பட்டாலும் அதன் ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் 14 ஆயிரத்து 500 ரூபாவை செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காவிட்டால் அது குறித்து தொழில் அமைச்சுக்கு அறிவிக்க முடியும்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் செலுத்தப்பட வேண்டும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு