நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத asymptomatic கொரோனா நோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது பெரும் பணியாக உள்ளது. கொரோனாவை கண்டறிய தற்போது பல சோதனை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது RT PCR சோதனை. ஆனால் இதில் முடிவுகள் தெரியவர சில மணி நேரங்கள் வரை ஆகும். அதற்குள் அந்த நபர் பலருக்கு கொரோனாவை பரப்பி விடுகிறார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொரோனாவை எளிதில் கண்டறிய புதியதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறிய முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்













0 Comments
No Comments Here ..