28,Apr 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

திட்டம் இருந்தால் வாருங்கள் - சஜித்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாமல்

இன்றைய கொரோனா பெரும் தொற்று நேரத்தில் ஆங்காங்கே கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்காமல், திட்டம் இருப்பின் இணைந்து செயல்பட வாருங்கள் என்று எதிர் கட்சி தலைவருக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

காலி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஆங்காங்கே கூறிக்கொண்டு இருக்காமல் வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கின்றோம். உங்களிடம் திட்டமிருந்தால், நாங்கள் இணைந்து செய்வோம்.

இது கோவிட் தொற்று. தேர்தல் அல்ல. தேர்தல் காலத்தில் நாங்கள் தேர்தலை செய்வோம். நீங்கள் கூறுவது போல் திட்டம் இருந்தால், வாருங்கள் அமர்ந்து பேசி திட்டத்தை அமுல்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். எந்த பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டார். 








திட்டம் இருந்தால் வாருங்கள் - சஜித்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாமல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு