28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலை இந்தியாவில்

இந்தியாவில் பரவிவரும் உருமாற்றம்பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலையளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு கொரோனா வைரஸ் தொடர்பில் முழு உலகமும் கவனஞ் செலுத்த வேண்டும். அந்த வைரஸ் மிகவும் வீரியம் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. B-1,167 என்று அறியப்படும் புதிய வகை கொரோனா ஏனைய கொரோனா வகைகளை விடவும் மிகவும் வீரியம் கொண்டது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைகளில் உரிய வகையில் அறிக்கையிடப்படுவதில்லையென அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் ஏற்படும் மரணங்கள் 8ற்கும் குறைவாகவே பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில சமயம் ஒரு வைத்தியசாலையில் மாத்திரம் 70 வரையான மரணங்கள் பதிவாகின்றன.

எனினும் உத்தியோகபூர்வமாக முழு நகரத்திலும் 55 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாவதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்றின் மொத்த மரண எண்ணிக்கை உத்தியோகபூர்வ அறிவித்தலில் வெளியிடப்படும் எண்ணிக்கையை விட வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் சடலங்களின் இறுதிக் கிரியைகளுக்கு போதுமான இடம் இல்லாததனால் சிலர் சடலங்களை கங்கைகளில் வீசிச்செல்வதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா மரணம் காரணமாக சடலங்களின் இறுதி கிரியைகளுக்காக தற்சமயம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலை இந்தியாவில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு