28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

கொங்கோ நாட்டில் தொடரும் துயரம்! 32 பேர் பலி - 172 குழந்தைகள் மாயம்!!

கொங்கோ நாட்டில் எரிமலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தநிலையில் லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் உலகின் சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான நயிரா கொங்கோ எரிமலை உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது.

அதில் இருந்து லாவா குழம்புகள் வெளியேறி அருகில் உள்ள கோமா நகருக்குள் புகுந்தது. அதில் லாவா குழம்புகள் தாக்கியும், அதில் உருவான நச்சுப்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 32 பேர் பலியானார்கள். 172 குழந்தைகள் உட்பட பலரை காணவில்லை.

அவர்களிலும் பலர் எரிமலைக் குழம்புக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரிமலை பாதிப்பால் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கத்து நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் எரிமலைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனவே எந்த நேரத்திலும் எரிமலை பெரிய அளவில் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கோமா நகரின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி கொங்கோ அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த நகரில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் லட்சக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

அவர்களை வாகனங்களில் ஏற்றி 20 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன





கொங்கோ நாட்டில் தொடரும் துயரம்! 32 பேர் பலி - 172 குழந்தைகள் மாயம்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு