18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அமெரிக்கா – இலங்கை பரஸ்பர கடல்பாதுகாப்பு

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை ஆகியன இணைந்து ஜுன் 24ஆம் திகதி முதல் திருகோணமலையில் முன்னெடுத்திருந்த இணைந்த கடல்பாதுகாப்பு ஒத்திகை CARAT நடவடிக்கையில் ஜுன் 30 ஆம் திகதி ஜப்பானின் கடற்படை சுய பாதுகாப்பு செயலணியின் JS YUUGIRI கப்பலும் பங்கேற்றிருந்தது.

CARAT இலங்கையின் ஒத்திகை நடவடிக்கையில் முதன் முறையாக உத்தியோகபூர்வ பங்கேற்பாளராக ஜப்பானின் கடற்படை சுய பாதுகாப்பு செயலணி பங்கேற்றிருந்தமை இது முதல் தடவையாகும். தேடுதல் மற்றும் மீட்டல் நடவடிக்கைகளில் JS YUUGIRI கப்பல் ஈடுபட்டதுடன், நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் Divisional Tactics (DIVTACS) இலும் பங்கேற்றிருந்தது.

இந்த இணை செயற்பாட்டில் ஜப்பானின் கடற்படை சுய பாதுகாப்பு செயலணி பங்கேற்றிருந்ததன் ஊடாக, தமது ஒருங்கிணைப்பு தந்திரோபாய ஆற்றலை மேம்படுத்தியிருந்ததுடன், இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையுடனான உறவுகளையும் மேம்படுத்தியிருந்தது. இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கும் ஏதுவாக இருக்கும். சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசுபிக் நிலையை கொண்டிருப்பதற்கு இது அத்தியாவசியமானதாகும்.

※CARAT: 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல் CARAT ஏற்பாடு செய்யப்படுவதுடன், தெற்காசியா, தென் கிழக்காசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையினால் முன்னெடுக்கப்படும் பழமையான பிராந்திய செயற்பாடாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை 27 வருட பூர்த்தியை பதிவு செய்திருந்தது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




அமெரிக்கா – இலங்கை பரஸ்பர கடல்பாதுகாப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு