06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

உலகை அச்சுறுத்தும் “லாம்ப்டா” வைரஸ்! இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான “லாம்ப்டா” சுமார் 30 நாடுகளில் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க இலங்கை எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 


லாம்ப்டா” தற்போதைய கொரோனா தடுப்பூசிகளுக்கு கூட கட்டுப்படாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.


முகக்கவசம் அணிவது மற்றும் சமூக தொலை தூரத்தை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.


கொரோனா வைரஸின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரம் தளர்த்தப்பட்டன.


ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


“என்ன மாறுபாடு என்பது முக்கியமல்ல. எந்தவொரு பரவலையும் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது முக்கியம்” என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.


பிரித்தானியாவில் மெதுவாக பரவத் தொடங்கியிருக்கும் ‘லாம்ப்டா’ கொரோனா சற்று மாறுபாடான ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




உலகை அச்சுறுத்தும் “லாம்ப்டா” வைரஸ்! இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு