அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் ஹொன்டுராஸ் குடியேறிகள் மெக்ஸிக்கோவின் தெற்கு பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறிகளை தடுக்கும் நோக்கில் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், மெக்ஸிகோவும் அதன் எல்லைகளை மூடியுள்ளதால் குறித்த குடியேறிகள் ஆற்று வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து மெக்ஸிக்கோவின் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஆற்றில் இறங்கிய குடியேறிகள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பலர் காயமடைந்துள்ள நிலையில், சிறுவர்கள் பலர் தங்களது பெற்றோர்களை விட்டு பிரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஹொண்டுராஸில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் தொழிலின்மை காரணமாக அங்குள்ளவர்கள் பலர் அமெரிக்க, மெக்ஸிக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..