19,Jul 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் - ஜி.எல். பீரிஸ்

இலங்கையில் பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ( G. L. Peiris )தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவின் புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை கூறினார்.

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பை பீரிஸ் பாராட்டினார்.

இந்த மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் பேரவையின் 2021 செப்டெம்பர் அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியமையை நினைவு கூர்ந்தார்.

அத்துடன் ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் உணர்வுடன் கூடிய சர்வதேச சமூகத்துடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.





பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் - ஜி.எல். பீரிஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு