17,Jul 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை விவகாரத்தில் ஐ.நா நேரடி தலையீடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த தகவலை அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், அதனை வெளியிடுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரியதன் மூலம் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.





இலங்கை விவகாரத்தில் ஐ.நா நேரடி தலையீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு