'நேரம்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'மஹாவீர்யார்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் நிவின் பாலியுடன் அப்படத்தின் இயக்குநர் அப்ரித் ஷைன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'மஹாவீர்யார்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் ஏற்பட்ட நட்டத்திற்கு ஈடாக, ரூ. 95 லட்சம் வழங்குவதாகவும், மேலும் 'ஆக்ஷன் ஹீரோ பிஜு பாகம் 2' திரைப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை வழங்குவதாகவும் நிவின் பாலி உறுதியளித்திருந்ததாகத் தயாரிப்பாளர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..