29,Apr 2024 (Mon)
  
CH
சமையல்

முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா

தேவையான பொருட்கள் 

பாசிப்பருப்பு

கம்பு

ராகி

கொண்டைக்கடலை

ஒரு கப் கோதுமை மாவு 

கால் கிலோ எண்ணெய்

உப்பு - தேவையான அளவு



செய்முறை * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

 

முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.


மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.


தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.


இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.




முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு