சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தெற்காசிய நாடான நேபாளத்திலும் தற்போது பரவியுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 7 ஆவது நாடாக நேபாளம் பதிவாகியுள்ளது.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கல்வி பயின்று நாடு திரும்பிய 30 நேபாள மாணவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் அவர்கள் காத்மண்டுவில் உள்ள மருத்துவனையில் சிகிச்பை; பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் தொடர்பில் பரிசோதனைகள் இடம்பெற்றுவருதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஏழு பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஹ_பே மாகாணத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனாவில் 1 287 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் நோய் பரவலை தடுப்பதற்காக சீனாவில் சில நகரங்களில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் 4 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, தாய்வான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம் உலகளாவிய ரீதியில் ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..