22,May 2025 (Thu)
  
CH
உலக செய்தி

பைபோர்ஜாய் புயலின் தாக்கத்தால் பாகிஸ்தானில் 28 பேர் உயிரிழப்பு

பைபோர்ஜாய் புயலின் தாக்கத்தால் பாகிஸ்தானில் 28 பேர் உயிரிழந்ததாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்களில் தெரிவிக்கின்றன. 


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது கிழக்கு – மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பைபோர்ஜாய் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

 

இந்த நிலையில் பைபோர்ஜாய் புயலின் தாக்கத்தால், அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 28 பேர் உயிரிழந்ததாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்களில் தெரிவிக்கின்றன.


பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் தாக்கம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கடலோர மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு, லக்கி மார்வாட் மற்றும் காரக் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் மின்சார கோபுரங்கள் சரிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.





பைபோர்ஜாய் புயலின் தாக்கத்தால் பாகிஸ்தானில் 28 பேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு