09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை - சீனாவின் விசேட திட்டம்

ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை அமைக்கும் பணியை சீன அரசு முன்னெடுத்து வருகிறது.   

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருந்துவ அவசர நிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் பரிசீலித்து வருகிறது.

வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டி வருகிறது.

1000 படுக்கைகள் கொண்ட குறித்த மருத்துவமனையை 6 நாட்களில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் படி பணிகள் முடிவடைந்தால், எதிர்வரும் பெப்பிரவரி மூன்றாம் திகதி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கப்படுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 




1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை - சீனாவின் விசேட திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு