சீனா மற்றும் ஹொங்காங் சென்று திரும்பிய இந்தியாவைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் 41 பேரை பலி கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் சீன பெருஞ்சுவர் உட்பட 10 நகரங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அன்மையில் சீனா சென்று வந்த மும்பையைச் சேர்ந்த 3 பேருக்கும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் திருச்சூரை சேர்ந்த 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை அமைக்கும் பணியை சீன அரசு முன்னெடுத்து வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மருந்துவ அவசர நிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் பரிசீலித்து வருகிறது.
அத்துடன், சீனாவில் வைரஸ் பரவிய வுகான் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக நிர்மாணித்து வருகின்றது.
1000 படுக்கைகள் கொண்ட குறித்த மருத்துவமனையை 6 நாட்களில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி பணிகள் முடிவடைந்தால், எதிர்வரும் பெப்பிரவரி மூன்றாம் திகதி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு வழங்கப்படுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..