01,May 2024 (Wed)
  
CH
சமையல்

பன்னீர் மசாலா தோசை

தேவையான பொருட்கள்:

 

தோசைமாவு - தேவையான அளவு 

பன்னீர் - 2 கப்

குடை மிளகாய் - 1 

வெங்காயம் - 1 

தக்காளி - 1 

பச்சை மிளகாய் - 1 

மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் 

சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன் 

கரம் மசாலா - 1 டீ ஸ்பூன் 

பட்டர் - தேவையான அளவு 

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

நெய் - தேவையான அளவு 


செய்முறை: 


வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும். பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும். 

இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும். 


தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும். இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும். இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி. இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.





பன்னீர் மசாலா தோசை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு