சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் தகித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 104 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்து வருவதால் சீன மக்கள் வீடுகளுக்குள் முடங்கி விடுகின்றனர்.
இதனை சமாளிக்கும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கின் பல இடங்களில் சாலைகளின் ஓரங்களிலும், பூங்காக்களிலும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
0 Comments
No Comments Here ..