யுக்ரைனிலிருந்து தமது படைகள் ரஷ்யாவிற்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைய, வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் ரஸ்ய பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுக்ரைனில் இருந்து, வாக்னர் குழு ரஸ்ய எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படும் கருத்துக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
எனினும், ரஸ்ய இராணுவம் தமது படைகள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஏவுகணை தாக்குதல்களை நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
அத்துடன், வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் பிரிகோஜினின் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறு ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
No Comments Here ..