29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

5பேருடன் ஆழ்கடலுக்குள் வெடித்து சிதறிய டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி பற்றி கருத்து வெளியிட்ட டைட்டானிக் பட இயக்குநனர்

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்

வர் அளித்துள்ள பேட்டியில். "டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே நான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்து இருக்கிறேன். அங்கு எனக்கு கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டன. அந்த பகுதியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் இருக்கும். அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும். அங்கு ஒவ்வொரு கணமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிறிய தவறு நடந்தாலும் அட்ரஸ் இல்லாமல் ஆகி விடுவோம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் புதிய தொழில்நுட்பத்தில் சென்சார்ஸ் உள்ளன. அதற்குள் இருக்கும் மனிதர்கள் விபத்தை முன்கூட்டியே கண்டுபிடித்து இருப்பார்கள். அதில் இருந்து ஜாக்கிரதையாக வெளியேறும் வழிகளும் உள்ளன. ஆனாலும் எதிர்பாராமல் நீர்மூழ்கி கப்பல் வெடித்துவிட்டதால் அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர்'' என்றார்.

மேலும் இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்

டைட்டன் நீர்­மூழ்­கியின் நகர்வு விப­ரமும் அத­னு­ட­னான தொடர்­பா­டலும் ஒரே நேரத்தில் துண்­டிக்­கப்­பட்­ட­தாக அறிந்­த­வுடன் அனர்த்தமொன்று ஏற்­பட்­டி­ருக்­கலாம் என உட­ன­டி­யாக தான் சந்­தே­கித்­த­தாக அவர் கூறி­யுள்ளார்.

1912ஆம் ஆண்டின் டைட்­டானிக் கப்பல் விபத்தும், டைட்டன் நீர்­மூழ்கி விபத்தும் எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டதன் விளை­வுகள் என ஜேம்ஸ் கெமரோன் கூறி­யுள்ளார்.

டைட்­டானிக் கப்­பலின் தள­பதி எப்­படி பனிப்­பா­றைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல், கப்­பலை வேக­மாக பனிப்­பாறைப் பகு­தி­க­ளுக்குள் செலுத்திச் சென்­றாரோ அதே­போன்று ஓஷன்கேட் நிறு­வ­னமும் எச்­ச­ரிக்­கை­களைப் பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டுள்­ளது என்­கிறார் கெமரோன்.


ஆழ்­கடல் சுழி­யோடல் சமூ­கத்தைச் சேர்ந்த சிலர், ஓஷன்­கேட்­டுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் கடி­த­மென்றை எழு­தி­ய­தாக கெமரோன் தெரி­வித்­துள்ளார். 

ஓஷன்­கேட்டின் பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்பில் கேள்வி எழுப்­பிய முதல் நபர் ஜேம்ஸ் கெமரோன் அல்லர்.

ஆனால், நீர்மூழ்கியின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்டொக்டன் ரஷ் அசட்டையாக இருக்கவில்லை என ஸ்டொக்டன் ரஷ்ஷுடன் இணைந்து 2009ஆம் ஆண்டு ஓஷன்கேட் நிறுவனத்தை ஸ்தாபித்த குய்லேர்மோ சோன்லெய்ன் கூறுகிறார். 2013ஆம் ஆண்டு ஓஷன்கேட்டிலிருந்து சோன்லெய்ன் விலகியிருந்தார். 



டைட்டனுக்கு என்ன நடந்தது என உடனடியாக அறிய முடியாதுள்ளதாகக் கூறிய அவர், எவ்வாறெனினும் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார். 

“விண்வெளி ஆராய்சிகளில் போன்று, இந்த 5 ஆய்வாளர்களினதும் நினைவுகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, என்ன நடந்தது என அறிந்துகொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்கிறார் சோன்லெய்ன்.

விசாரணைகள்

டைட்டன் நீர்மூழ்கி அனர்த்தம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. டைட்டன் நீர்மூழ்கியின் தாய்க்கப்பலான த போலார் பிரின்ஸ் பதிவு செய்யப்பட்ட நாட்டின் விசாரணை அமைப்பு என்ற வகையில் இவ்விசாரணையை தான் நடத்தவுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது. அதேவேளை அமெரிக்கக் கரையோரக் காவல் படையும் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது





5பேருடன் ஆழ்கடலுக்குள் வெடித்து சிதறிய டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி பற்றி கருத்து வெளியிட்ட டைட்டானிக் பட இயக்குநனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு