04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

17 வயது ஆபிரிக்க சிறுவனை சுட்டுக்கொன்ற காவல்துறை


பாரிஸ் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் போலீஸார் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர். 


பின்னர் காரில் இருந்த ஆப்பிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.


இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர், "நடந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. இது தெளிவான சட்ட மீறல்" என்று கூறியுள்ளார். முன்னதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.


பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், "இது தெளிவான சட்டவிதிமீறல்" என்றார். இதற்கிடையில் சிறுவனின் தாய் டிக்டாக் சமூக வலைதளம் மூலமாக பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்





17 வயது ஆபிரிக்க சிறுவனை சுட்டுக்கொன்ற காவல்துறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு