22,May 2025 (Thu)
  
CH
உலக செய்தி

டைட்டானிக் கப்பலை பார்வையிட மீண்டும் சுற்றுலா ஒஷன்கேட் நிறுவன விளம்பரத்தால் சர்ச்சை

டைட்டானிக் கப்பலை பார்வையிட மீண்டும் சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிதைந்து போன டைட்டானிக் கப்பலை காண ஜூன் மாதம் 18ம் தேதி ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய அன்றைய தினமே நேர்ந்த கோர விபத்தில் ஓஷன்கேட் நிறுவனத்தின் CEO உள்பட அதில் பயணித்த 8 பணக்காரர்களும் உயிரிழந்தனர்.


இதை அடுத்து இனி ஆழ்கடல் சுற்றுலா மேற்கொள்ள போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டைட்டானிக் கப்பலை பார்க்க ரூ.2 கோடிக்கு சுற்றுலா டிக்கெட் விற்பதாக இணையதளத்தில் அந்நிறுவனம் விளம்பரம் படுத்தியுள்ளது. நீர் மூழ்கியில் பயணித்த 5 பேறும் உயிரிழந்து 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் சுற்றுலா அழைத்து செல்வதாக வெளியிட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




டைட்டானிக் கப்பலை பார்வையிட மீண்டும் சுற்றுலா ஒஷன்கேட் நிறுவன விளம்பரத்தால் சர்ச்சை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு