01,May 2024 (Wed)
  
CH
சமையல்

சுவையான இளநீர் இட்லி

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - ஒரு கிலோ

உளுந்து - கால் கிலோ

வெந்தயம் - இளநீர் - தேவையான அளவு

 உப்பு - சிறிதளவு.


செய்முறை

இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும். அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும். அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் அவித்து எடுக்கவும்


சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!


உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து. கவனத்தில் கொள்ள வேண்டியவை.. இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும். அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது. அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.




சுவையான இளநீர் இட்லி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு