இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினர். தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
0 Comments
No Comments Here ..