அமெரிக்க இராணுவ விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த விமானம் தலிபான்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று (27) பகல் 1.15 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் முக்கிய சிஐஏ அதிகாரிகள் உட்பட விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானப்படையில் இலச்சினை பொறிக்கப்பட் விமானத்தின் சிதைவுகளை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில வெளியாகியுள்ளன.
முதலில் விழுந்து நொருங்கியது பயணிகள் விமானம் என தகவல்கள் வெளியான போதிலும் அதிகாரிகள் பின்னர் அதனை நிராகரித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..