21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சிங்கப்பூரின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலங்கையை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம்,

புதிய சகாப்தத்துக்கான ஜனாதிபதியாக தான் விளங்கப்போவதாகவும், சிங்கப்பூர் கலசாரத்தை உலகின் பிரகாசிக்கும் ஸ்தானமாக பரிமணிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பிரபல பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் (66) சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.


சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர், சமூக கொள்கைகள் அமைச்சர் மற்றும் மத்திய வங்கித் தலைவர் உட்பட பல பதவிகளை விகித்து வந்த தர்மன் சண்முகரத்தினம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பதவிகளிலிருந்தும் ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் (PAP) கடந்த மாதம் விலகினார்.



சிங்கப்பூரின் ஜனாதிபதி பதவி அரச சார்பற்றது என்பதால், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என்பதே இந்த விலகலுக்குக் காரணம்.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை முன்மொழிபவரையும் வழிமொழிபவரையும் அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டை கடந்த புதன்கிழமை தர்மன் சண்முகரத்தினம் நடத்தினார்.

'ஒருவருக்கொருவர் மரியாதை' என்ற தொனிப்பொருளில் இச்செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது




சிங்கப்பூரின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலங்கையை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம்,

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு