இவர்கள் இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவராவார். இவருடன் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்னர்.
இந்த இளைஞர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவர்களிடம் காணப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
0 Comments
No Comments Here ..