24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

13வது திருத்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிற்கும் இடையில் சந்திப்பு.

13வது திருத்தத்தின் கீழ் பொலிஸ் அதிகாரம் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சந்தி;ப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் கூட அதிகாரப்பகிர்வு மிகச்சிறந்த முறையில் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்ததுடன் அத்தகைய முறையை இலங்கையிலும் பயன்படுத்த முடியும் என விளக்கமளித்தனர் 



இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டிரான் அலெஸ் குறிப்பிட்ட நாடுகளின் இலங்கையின் அரசியல் சமூக கலாச்சாரசூழ்நிலைகளுக்கும் அந்த நாடுகளின் சமூக அரசியல் சூழ்நிலைகளுக்கும் வித்தியாசமிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரங்களை பிரிக்காமல் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள கரிசனைகளுக்கு தீர்வை காண்பதற்கு மாற்றீடான வழிமுறைகளை காணவேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளபடி 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியமைக்கான தேவை என்னவென அமைச்சர் கேள்வி எழுப்பினார்.





13வது திருத்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிற்கும் இடையில் சந்திப்பு.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு