24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

லக்ஸ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் -வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன்கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் 18 வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

 

இந்த புனிதமான நாளில் விடுதலைப்புலிகளின் இரக்கமற்ற வன்முறையால் துரதிஸ்டவசமாக உயிரிழந்த ஒரு சிறந்த இராஜதந்திரி லக்ஸ்மன் கதிர்காமரின் நினைவை போன்றுகின்றோம்.

அனைத்து இலங்கையர்களினதும் பொதுவான நோக்கத்திற்கான கதிர்காமரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு அழியாத தடத்தை பதித்துள்ளன.



அமைதியான மற்றும் ஐக்கிய இலங்கைக்கான அவரது தொலைநோக்கு இன்றும் எதிரொலிக்கின்றது, பிளவு மற்றும் வெறுப்பை உருவாக்கும் சக்திகள் உள்ள போதிலும் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடும் அவரதுமரபு அத்தகைய சக்திகளுக்கு ஒரு நிலையான வெறுப்பாக காணப்படுகின்றது.

அவரது வாழ்க்கையை பற்றி சிந்திக்கும்போது அவருடைய அர்ப்பணி;ப்பிலிருந்து உத்வேகம் பெறுவோம், அவரது குறிப்பிடத்தக்க பயணத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.





லக்ஸ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் -வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு