கடந்த மாதம் 29ஆம் தலைமன்னாரில் இருந்து இந்த பேரணி ஆரம்பமானது. இறுதிநாளான இன்றைய தினம் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது இந்த நடைபவனியின் கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலும் ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரையிலும் தற்போது நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரின் தலைமையில் ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
0 Comments
No Comments Here ..