தற்போது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் "எலிக்காய்ச்சல்" எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் அதிகரிப்பதை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டி எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் நபர்கள் குறிப்பாக, மீனவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
குருணாகல் ஹிரிபிட்டியவில் அமைந்துள்ள ரொடரட்ட வாவியில் நீராடிய இரு இளைஞர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..